ஆதிசங்கர பகவத்பாதர் ஸூத்ர பாஷ்யம், பிரும்ம சூத்திரம் முதலிய மிகக்கடினமான நூல் களிலுள்ள விஷயங்களை, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் பொருட்டு பல சிறிய, பெரிய விளக்கவுரைகளாக இயற்றி யுள்ளார். அவற்றுள் ஒன்று ஷட்பதி ஸ்தோத்திரம்.
ஆதிசங்கரர் பாதசாரியாகவே பல தேசங்கள், வனங்கள் எல்லாம் கடந்து நமது தர்மத்தை ஆங்காங்கே நிலைநிறுத்தி, இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்தார்.
ஷட்பதி ஸ்தோத்தி ரம் மிகச்சிறியதானா லும், உலகைக் காக்கும் மகா விஷ்ணுவைப் பற்றி மிகவும் உயர்ந்த தத்துவங்களும், மனதை உருக்கும் பாவமும், அமிர்தமான சொற்றொடர் களையும்கொண்ட மதுரமான ஸ்தோத்திர மாகும். இதிலுள்ள சுலோகங்கள் "ஆர்யா' விருத்தத்தில் அமைந் துள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
"ஷட்' என்றால் ஆறு. "பதி' என்றால் கால். ஆறுகால் கொண்ட ஸ்தோத்திரம். பதி என்பதற்கு ஒரு முழு சுலோகம் என்று பொருள் கொண்டால், ஆறு சுலோகங்கள் கொண்ட நூல் என்று பொருள்படுகிறது.
இதில் ஏழு சுலோ கங்கள் உள்ளன. ஏழாவது சுலோகமா னது பிரார்த்தனையாகவும், பலச் சுருதியாகவும் அமைந்துள் ளது. ஆகவே முதல் ஆறு சுலோகங் களில் சாஸ்திர நுட்பமான விவரங்கள் விளக் கப்பட்டுள்ளன.
ஏழாவது சுலோகத்தில் "நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணம்' என்னும் ஆறு பதங்கள் வருகின்றன. "இந்த ஆறு பதங்கள் கொண்ட வாக்கியம் என் வாயாகிய தாமரையில் எப்பொழுதும் இருக்கட்டும்' என்று பிரார்த்தனை செய்கிறார்.
கடைசி சுலோகத்தில் வாயை தாமரைக்கு ஒப்பிடுகிறார். வண்டு தாமரையை மொய்க்கும். வண்டுக்கு ஆறு கால் களே. அதுபோல, இந்த ஆறு சொற் களும் என் வாய் என்ற தாமரையில் எப்பொழுதும் இருக்கட்டும் என்கிறார் சங்கரர்.
"வண்டு' என்ற பதத்தின் பொருளில் ஷட்பதி என்ற சொல்லை ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கத்திலும், ஸ்ரீசௌந் தர்ய லஹரியிலும் பயன் படுத்தியிருக்கிறார்.
"என் மனமாகிய வண்டு உனது தேனான பாதார விந்தங்களை நோக்கி என்றும் சஞ்சரித்து ஆனந்திக் கும்படி அருள்புரிவாயாக' என்று வேண்டுகிறார்.
"மனமாகிய வண்டு' என்பதற்கான விளக்கம் சௌந்தர்ய லஹரி யில் (சுலோகம் 90/92) கிடைக்கிறது. "ததாநே தீநேப்ய' என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் கடைசி வரியில் "நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரண சரண: ஷட் சரணதாம்' என்று வருகிறது. பஞ்ச இந்திரியங் கள் என்னும் ஐந்து கரணங் களோடு, மனம் என்னும் ஆறா வது கரணம் சேர்கையில் ஆறுகால் ஆகிறது. மற்ற ஐந்து இந்திரியங்களை ஆட்டிப் படைப்பது மனம்தான். ஆகவே, மனமும் மற்ற ஐந்து இந்திரியங்களும் சேர்ந்து ஆறுகால் ஜந்துவாகவே தோற்றமளிக்கிறது. வண்டுக்கும் ஆறுகால். அதன் காரணமாகவே வண்டுடன் ஒப்பிடுகிறார்.
"அப்படிப்பட்ட என் ஜீவன் உன் பாதக் கமலங்களில் இருக்கட்டும் தாயே' என்கிறார். "வண்டு எப்படி தாமரைப்பூவில் ஆனந்தமாக வசித்துக் கொண்டிருக்குமோ அதுபோல இந்த ஷட்பதி வண்டு ஸ்தோத்திரமும் எப்போதும் எனது வாய்த் தாமரையில் இருக்கட்டும்' என்று ஆதிசங்கரர் பிரார்த்திப்பதால் இதற்கு வண்டு ஸ்தோத்திரம் என்ற பெயரும் உண்டு.
இந்த மனம், இந்திரியங்களின் விவரங்கள் முதல் சுலோகத்திலேயே வந்து விடுகின்றன.
"அவிநய மபநய விஷ்ணோ தமய மந:
சமய விஷய ம்ருகத்ரு ஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய
தாரய ஸம்ஸார ஸாகரத:'
இந்த சுலோகத்தில் ஐந்து விஷயங்களை வேண்டிக்கொள்கிறார்.
=விநயமின்மையைப் போக்குங்கள்.
=மனதை அடக்கும்படிச் செய்யுங்கள்.
=விஷயங்களிலிலுள்ள ஆசையைப் போக்குங்கள்.
=பூத தயை பெருகும்படிச் செய்யுங்கள்.
=பிறவிக் கடலிலிலிருந்து கடைத்தேறச் செய்யுங்கள்.
முதலிலில் "விநயத்தை கொடுங்கள்' என்கிறார்.
விநயம் என்பதற்கு அடக்கம், பணிவு, விட்டுக்கொடுப்பது, அகங்காரம் இல்லாமலிலிருப்பது என்று பொருள் கொள்ளலாம். மனிதனுக்கு உண்டாகும் எல்லா துன்பங்களுக்கும் காரணம் அகங் காரமே. அது ஒழியவேண்டும். ஈசுவர அனுக்ரஹம் இருந்தால் தான் அகங்கரம் ஒழியும். அதனால்தான் ஆதிசங்கரர், "விஷ்ணுவே! எனக்கு விநயத்தைத் தந்தருள்வாயாக' என்று வேண்டுகி றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அகங்கார நிவர்த்திக்கு மனோ நிக்ரகம் தான் காரணமாதலால், இரண்டாவதாக மனதை அடக்குங்கள் என வேண்டுகிறார்.
"தமய மநு' என்பது அடுத்த பிரார்த்தனை. மனோ நிக்ரகம் வேறு; மனவடக்கம் வேறு. அதாவது மனோ நிக்ரகம் என்பது மனம் நசிந்துபோவது. மனமில்லாவிட்டால் மற்றவை ஒன்றுமே இல்லை. இரண்டாவதாக வேறொன்றுமே கிடையாது. இது அத் வைதத்தின் உச்ச கட்டம். ஸ்ரீரமண மகரிஷி இதை அனுபவித்துப் பேரானந்த மடைந்தார்.
ஆனால் மன அடக்கத்தில் மனம் அடங்கியிருக்கும். கொஞ்சம் பிடி தளர்ந்தால் மனது மறுபடியும் தலைதூக்கும். மனவடக்கத்தில் மனம் இருக்கிறது. ஆனால், அடங்கி சேட்டை செய்யாமல் இருக்கிறது. மனோ நாசத்தில் மனமே இல்லை.
மனம் எளிதில் கட்டுப்படுவதில்லை. தறிகெட்டு புலன்களை எல்லா விஷயங்களின் பின்னாலும் ஓடச்செய்கிறது. மனதை அடக்குவது மிகவும் சிரமம். அதனால் தான் அந்த முயற்சியில் வெற்றிபெற மகாவிஷ்ணுவின் அருளை நாடுகிறார் விநய சம்பன்னரான ஸ்ரீசங்கரர். இதையே தாயுமானவ சுவாமிகள்-
"சிந்தையை அடக்கியே சும்மா
இருக்கின்ற திறம் அரிது
சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட
அறிவான தெய்வமே தேசோமயானந் தமே'
என்கிறார்.
திருமூலரும் இதை
"தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து என் உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நானறியேனே.'
என அழகாகக் கூறுகிறார்.
இறைவனுடைய பேரின்பத்தை நாடி, அந்த முயற்சியில் ஈடுபட்டால், படிப்படியாக "நான்' என்ற நினைவு நீங்கி, எல்லாம் அவனே என்ற தெளிவு ஏற்படுகிறது. இந்த உணர்வு வலுவடையும்போது, உடல் என்ற தசை உணர்ச்சி, நினைவு, மறப்பு என்ற மனவுணர்ச்சி அனைத்தும் அகன்று தெய்வீக ஆனந்த நிலை ஏற்படுகிறது. இதுவே அனுபூதிநிலை.
ஆதிசங்கரர் நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் ஏராளம்.
ஏராளமான பாடல்களை இறைவன்மேல் பாடி, தெய்வீகமான நிலையை அனுபவித்து, நம்மைப்போல மிகச்சாதாரணமான ஜீவன் களும் கடைத்தேற வேண்டுமென்ற கருணை யால் நல்லதொரு வழியைக் காட்டியருளினார்.
பரம உத்தமமான மனிதப்பிறவியை அடைந்த நாம், மகான் சங்கரரின் பாடல்களில் ஏதாவது ஒன்றையாவது சங்கரஜெயந்தி நன்னாளில் பாடி ஆதிசங்கரரின் குருவருளைப் பெறவேண்டும்.